இந்திய ராணுவம் உருவாக்கிய மெசேஜிங் ஆப்

இந்திய ராணுவம் பாதுகாப்பான மெசேஜிங் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த ஆப் SAI என்ற பெயரில் வெளியிட உள்ளது. இது தகவல்களை முழுமையாக பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும் இந்த ஆப் வாய்ஸ், டெக்ஸ்ட் மற்றும் வீடியோ காலிங் போன்றவற்றை பாதுகாப்பாக இயக்கும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்று வர்த்தக ரீதியில் கிடைக்கும் மெசேஜிங் ஆப் ஆகும். மேலும் இது முழுமையான என்க்ரிப்ஷன் வசதியை கொண்டிருக்கிறது. உள்நாட்டு சர்வெர் மற்றும் கோடிங் பயன்படுத்துவதால் SAI செயலி அதிக பாதுகாப்பானதாக இருக்கும்.

முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுவிட்டது. தற்சமயம் இதன் ஐஒஎஸ் வெர்ஷன் உருவாகி வருகிறது. விரைவில் இதன் ஐஒஎஸ் வெர்ஷன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.