ரூ. 7999 விலையில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.82 இன்ச் ஹெச்டி பிளஸ் 20.5:9 டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, டெப்த் சென்சார், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் ஜெம்-கட் டெக்ஸ்ச்சர் டிசைன் வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் சிறப்பம்சங்கள்:

  • 6.82 இன்ச் 1640×720 பிக்சல் ஹெச்டி+ 20.5:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
  • ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர்
  • IMG பவர் விஆர் GE8320 ஜிபியு
  • 3ஜிபி ரேம்
  • 32 ஜிபி மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 6.2
  • டூயல் சிம் ஸ்லாட்
  • 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி ஃபிளாஷ், டெப்த் சென்சார்
  • 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்இடி ஃபிளாஷ்
  • கைரேகை சென்சார்
  • 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டிடிஎஸ்-ஹெச்டி சரவுண்ட் சவுண்ட்
  • 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
  • மைக்ரோ யுஎஸ்பி
  • 6000 எம்ஏஹெச் பேட்டரி
  • 10 வாட் சார்ஜிங்

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஓசன் வேவ் மற்றும் வைலட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 28 ஆம் தேதி துவங்குகிறது.