விலையில் ஷாக்… ரெட்மி நோட் 9 இந்தியாவில் அறிமுகம்

சியோமியின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ. 11999 துவக்க விலையில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் மற்றும் எம்ஐ யுஐ 11 இயங்குதளம் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 9 முந்தைய ரெட்மி நோட் 8 மாடலை விட 21 சதவீதம் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு உள்ளதாக சியோமி தெரிவித்து இருக்கிறது. ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

ரெட்மி நோட் 9 சிறப்பம்சங்கள்

 • 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
 • ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
 • 1000 மெகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் மாலி ஜி52 ஜிபியு
 • 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
 • 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • டூயல் சிம் ஸ்லாட்
 • ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐ யுஐ 11
 • 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ்
 • 8 எம்பி 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
 • 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
 • 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
 • 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.25
 • கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
 • 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
 • ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
 • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி
 • 5020 எம்ஏஹெச் பேட்டரி
 • 22.5 வாட் சார்ஜர், 9வாட் ரிவர்ஸ் சார்ஜிங்

புதிய ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் பெபிள் கிரே, ஆர்க்டிக் வைட் மற்றும் அக்வா கிரீன் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் பேஸ் மாடல் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி விலை ரூ. 11999, 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13499 என்றும் டாப் எண்ட் மாடலான 6 ஜிபி ரேம், 128 ஜிபி விலை ரூ. 14999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விலை ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டு வந்த நிலையில், ரெட்மி நோட் 9 விலை எதிர்பார்ப்புகளை கடந்து அதிக விலையில் அறிமுகமாகி இருக்கிறது. முன்னதாக சியோமி அறிமுகம் செய்த ரெட்மி நோட் 9 ப்ரோ மாடல்கள் துவக்க விலை ரூ. 13999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தியாவில் ரெட்மி நோட் 9 விற்பனை அமேசான் இந்தியா, சியோமி அதிகாரப்பூர்வ வலைதளம், எம்ஐ ஹோம் மற்றும் எம்ஐ ஸ்டூடியோ ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ஜூலை 24 ஆம் தேதி துவங்குகிறது.