ஜியோவின் மேட் இன் இந்தியா 5ஜி நெட்வொர்க் அறிவிப்பு

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 43 வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. முதல் முறையாக ஆன்லைனில் நடைபெற்ற இவ்விழாவில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி உரையாற்றி ஜியோவின் புதிய சேவைகள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 5ஜி நெட்வொர்க் தயார் நிலையில் இருப்பதாகவும், விரைவில் இதற்கான சோதனை துவங்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார். இந்த தொழில்நுட்பம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

5ஜி ஸ்பெக்ட்ரம் கிடைக்கும் போது ஜியோவின் மேட் இன் இந்தியா 5ஜி நெட்வொர்க் தயார் நிலையில் இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு இதன் சேவைகள் துவங்கும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் வழங்கப்பட்டதும், வெளிநாடுகளுக்கும் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் ஒன்றிணைந்து என்ட்ரி லெவல் 4ஜி/5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு மற்றும் பிளே ஸ்டோர் கஸ்டமைசேஷன் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கூகுள் நிறுவனம் ஜியோ பிளாட்ஃபார்ம்சில் ரூ. 33737 கோடி முதலீடு செய்து சுமார் 7.7 சதவீத பங்குகளை வாங்க இருப்பதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி தெரிவித்தார்.