ஒன்பிளஸ் பட்ஸ் வெளியீட்டு விவரம்

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் ஜூலை 21 ஆம் தேதி ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனுடன் அறிமுகமாகும் என தெரிவித்து உள்ளது.

புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்றும் முற்றிலும் வையர்கள் இன்றி மிக சுலபமாக இயக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ப்ளூடூத் ஹெட்செட்டான ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் மாடலை 2017 ஆண்டில் வெளியிடப்பட்டது. பின் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் நெக்பேண்ட் ஹெட்செட் மாடலை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒன்பிளஸ் 8 சீரிசுடன் அறிமுகம் செய்தது.

ஒன்பிளஸ் நார்டு ஏஆர் அறிமுக நிகழ்வு ஒன்பிளஸ் நார்டு செயலியில் நேரலை செய்யப்படுகிறது. இந்த நிகழ்வு ஜூலை 21 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு துவங்க இருக்கிறது.