இந்தியாவில் ஃபுஜிஃபிலிம் இன்ஸ்டாக்ஸ் மினி லின்க் ஸ்மார்ட்போன் ப்ரின்டர் அறிமுகம்

ஃபுஜிஃபிலிம் நிறுவனம் இன்ஸ்டாக்ஸ் மினி லின்க் ஸ்மார்ட்போன் ப்ரின்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அளவில் மிகவும் சிறியதாக இருக்கும் இந்த ப்ரின்டர் ஸ்மார்ட்போனில் எடுக்கப்படும் புகைப்படங்களை ஃபுஜிஃபிலிம் இன்ஸ்டாக்ஸ் மினி இன்ஸ்டன்ட் ஃபிலிம்களில் ப்ரின்ட் செய்யும். மேலும் புகைப்படங்களை ப்ரின்ட் செய்யும் முன் அவற்றை கஸ்டமைஸ் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.

இன்ஸ்டாக்ஸ் மினி லின்க் ஸ்மார்ட்போன் ப்ரின்டர் கொண்டு ஸ்மார்ட்போன் புகைப்படங்களை மிக எளிதில் வேகமாக ப்ரின்ட் செய்யப்படும். இதில் ப்ரின்ட் ஆகும் புகைப்படம் 62mmx46mm அளவில் 12.5dots/mm ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட்போன் இந்த ப்ரினிடர் உடன் ப்ளூடூத் 4.2 மூலம் இணைந்து கொண்டு புகைப்படங்களை வெறும் 12 நொடிகளில் ப்ரின்ட் செய்துவிடும்.

இந்த ப்ரின்டர் 200 கிராம் எனும் மிகவும் குறைந்த எடை கொண்டிருக்கிறது. இன்ஸ்டாக்ஸ் மினி லின்க் ஆப் மூலம் புகைப்படங்களை ரோட்டேட் செய்வது, ஃபில்ட்டர் மாற்றுவது, பிரைட்னஸ் மாற்றுவது போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.

ஃபுஜிஃபிலிம் இன்ஸ்டாக்ஸ் மினி லின்க் ப்ரின்டர் ஆஷ் வைட், டஸ்கி பின் மற்றும் டார்க் டெனிம் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.