நான்கு ஸ்மார்ட்வாட்ச்களில் சூரியசக்தி மூலம் சார்ஜ் செய்யும் வசதி அறிமுகம்

ரக்கட் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை உற்பத்தி செய்வதில் பிரபலமான கார்மின் நிறுவனம் சூரியசக்தி மூலம் சார்ஜ் ஆகும் தொழில்நுட்பத்தை நான்கு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் வழங்கி உள்ளது.

கார்மின் இன்ஸ்டின்க்ட், ஃபெனிக்ஸ் 6, ஃபெனிக்ஸ் 6எஸ் மற்றும் டாட்கிட்ஸ் டெல்டா அட்வென்ச்சர் மாடல்களில் சூரியசக்தி மூலம் சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஃபெனிக்ஸ் 6எக்ஸ் ப்ரோ சோலார் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் இந்த அம்சம் வழங்கப்பட்டது.

இன்ஸ்டின்க்ட் சோலார் எடிஷன் பேட்டரி சேவர் மோடில் அன்லிமிட்டெட் பேட்டரி லைஃப் வழங்குகிறது. எஸ்படிஷன் மோடில் இரண்டு மாதங்களுக்கும் மேல் பயன்படுத்த முடியும். வெளியில் செல்லாமல் பயன்படுத்தும் போது அதிகபட்சம் 24 நாட்களுக்கும் தேவையான அளவு சூரிய வெப்பம் கிடைக்கும் போது 50 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.

ஃபெனிக்ஸ் 6எஸ் ப்ரோ சோலார் பேட்டரி ஸ்மார்ட்வாட்ச் மோடில் 10.5 மணி நேரங்களுக்கு பேக்கப் வழங்குகிறது. ஃபெனிக்ஸ் 6 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மோடில் தேவையான சூரிய வெப்பம் கிடைத்தால் 16 நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது. டாக்டிக்ஸ் டெல்டா சோலார் எடிஷன் தேவையான சூரிய வெப்பம் கிடைக்கும் பட்சத்தில் பவர் மேனேஜர் மோடில் 24 நாட்களுக்கு பேக்கப் வழங்கும்.

இன்ஸ்டின்க்ட் சோலார் மாடல் விலை 399.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 30017 என்றும் ஃபெனிக்ஸ் 6 சீரிஸ் சோலார் எடிஷன் விலை 849.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 63787 என்றும் டாக்டிக்ஸ் டெல்டா சோலார் எடிஷன் விலை 1099 இந்திய மதிப்பில் ரூ. 82453 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.