ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

லாவா நிறுவனம் இந்தியாவில் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. லாவா இசட்61 ப்ரோ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் HD+ 18:9 டிஸ்ப்ளே, 1.6GHz ஆக்டாகோர் பிராசஸர், 2GB ரேம், 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் புகைப்படங்களை அழகாக்கும் அம்சங்கள், ஃபேஸ் அன்லாக் வசதி, 3100mAh பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

லாவா இசட்61 ப்ரோ சிறப்பம்சங்கள்

 • 5.45 இன்ச் 1440×720 பிக்சல் HD+2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
 • 1.6GHz ஆக்டா கோர் பிராசஸர்
 • 2GB ரேம்
 • 16GB மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • ஆண்ட்ராய்டு ஒஎஸ்
 • டூயல் சிம்
 • 8MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
 • 5MP செல்ஃபி கேமரா
 • 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
 • மைக்ரோ யுஎஸ்பி
 • 3100mAh பேட்டரி

லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் புளூ மற்றும் ஆம்பர் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 5774 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.