டிக்டாக் தடை எதிரொலி – இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் அம்சம் அறிமுகம்

இன்ஸ்டாகிராம் செயலி பயன்படுத்துவோருக்கு ரீல்ஸ் அம்சத்திற்கான அப்டேட் இந்தியாவில் வழங்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பதிவு செய்வதை போன்றே ரீல்ஸ் உருவாக்க முடியும். இன்ஸ்டாகிராமில் அனைவரும் ரீல்ஸ்களை பார்ப்பது மற்றும் பகிர்ந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன் ரீல்ஸ் அம்சம் இந்தியாவில் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியான நிலையில், தற்சமயம் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

முன்னதாக இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டிக்டாக்கிற்கு மாற்றான இந்திய செயலிகள் பிளே ஸ்டோரில் பிரபலமாக துவங்கின. இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனமும் டிக்டாக் போட்டியாக துவங்கிய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சத்தை தற்சமயம் வழங்க துவங்கி உள்ளது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் வீடியோ-மியூசிக் ரீமிக்ஸ் சேவை ஆகும். இது இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரிஸ் பகுதியில் வழங்கப்படுகிறது. இதை கொண்டு அதிகபட்சமாக 15 நொடிகளுக்கு ரீல்களை உருவாக்க முடியும்.