தினமும் 1.5GB டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுகை அறிவிப்பு

ஏர்டெல் நிறுவனம் ரூ. 289 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வசதி வழங்கப்படுகிறது. இவைதவிர Zee5 பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது.

ரூ. 289 பிரீபெயிட் சலுகை தவிர ரூ. 79 டாப்-அப் வவுச்சரையும் ஏர்டெல் அறிவித்து இருக்கிறது. இதில் பயனர்களுக்கு Zee5 பிரீமியம் சந்தா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. வழக்கமாக Zee5 மாதாந்திர சந்தா கட்டணம் ரூ. 99 ஆகும்.

அந்த வகையில் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ. 289 சலுகையை தேர்வு செய்யும் போது தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100SMS, Zee5 பிரீமியம், ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் சந்தா உள்ளிட்டவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது.

மேலும் இந்த சலுகையில் விண்க் மியூசிக் வசதி, ஷா அகாடமயில் ஒரு வருடத்திற்கான ஆன்லைன் வகுப்புகளை இலவசமாக வழங்கப்படுகிறது.