ரூ. 13 ஆயிரம் பட்ஜெட்டில் போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய போக்கோ ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67 inch FHD+ 1080×2400 பிக்சல் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், அதிகபட்சம் 6GB LPDDR4X ரேம், 48MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 5MP மேக்ரோ சென்சார், 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

போக்கோ எம்2 ப்ரோ சிறப்பம்சங்கள்

 • 6.67-inch 2400×1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
 • ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720G 8nm பிராசஸர்
 • அட்ரினோ 618 GPU
 • 4GB / 6GB LPPDDR4x ரேம், 64GB (UFS 2.1) மெமரி
 • 6GB LPPDDR4x ரேம், 128GB (UFS 2.1) மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • டூயல் சிம்
 • ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
 • 48MP பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, LED ஃபிளாஷ், EIS
 • 8MP 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
 • 5MP 2cm மேக்ரோ லென்ஸ்
 • 2MP டெப்த் சென்சார்
 • 16MP செல்ஃபி கேமரா
 • பக்கவாட்டில் கைரேகை சென்சார்
 • 3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டூயல் மைக்ரோபோன்
 • ஸ்பிலாஷ் ப்ரூஃப் (P2i coating)
 • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
 • யுஎஸ்பி டைப்-சி
 • 5000mAh பேட்டரி
 • 33W ஃபாஸ்ட் சார்ஜிங்

புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் அவுட் ஆஃப் புளூ, கிரீன் அண்ட் கிரீனர் மற்றும் டூ ஷேட்ஸ் ஆஃப் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் போக்கோ எம்2 ப்ரோ 4GB+64GB மெமரி மாடல் விலை ரூ. 13999 என்றும், 6GB+64GB மெமரி மாடல் விலை ரூ. 14999 என்றும் 6GB+128GB மெமரி மாடல் விலை ரூ. 16999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 14 ஆம் தேதி துவங்குகிறது.