வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் சாம்சங் சென்டரை தொடர்பு கொள்ளும் வசதி

சாம்சங் நிறுவனம் தனது வாடிக்கையாளர் சேவை மையங்களை வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளும் வசதியினை வழங்கி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடி தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற முடியும்.

வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்வோருக்கென ரிமோட் சப்போர்ட், லைவ் சாட், சாம்சங் வலைதளம் அல்லது யூடியூபில் உள்ள விளக்க வீடியோக்கள் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.

சாம்சங் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள வாடிக்கையாளர்கள் சாம்சங் வாட்ஸ்அப் சப்போர்ட் நம்பர் – 1800-5-7267864 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.

பின் எந்த சாம்சங் சாதனம் பற்றிய கேள்விகள், சர்வீஸ் சென்டர் முதவரி, சரி செய்ய கொடுத்த சாதனத்தின் நிலை, புதிய சலுகைகள் மற்றும் புதிய சாம்சங் சாதனங்களுக்கான டெமோ மற்றும் இன்ஸ்டாலேஷன் போன்ற சேவைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த சேவை அனைத்து வார நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஏற்கனவே சாம்சங் மெம்பர்ஸ் ஆப் லைவ் சாட், சர்வீஸ், ரிமோட் சப்போர்ட் என பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.