ரூ. 999 விலையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்

ட்ரூக் ஃபிட் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்போன் இந்தியாவில் ரூ. 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இயர்போன் அறிமுக சலுகை பெயரில் அமேசானில் ஆயிரம் ரூபாய்க்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் இந்தியாவில் கிடைக்கும் விலை குறைந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலாக ட்ரூக் ஃபிட் ப்ரோ இருக்கிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ட்ரூக் ஃபிட் ப்ரோ மாடலில் ப்ளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங், 24 மணி நேர பேக்கப், ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் மூலம் இதனை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.

புதிய ட்ரூக் ஃபிட் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் உடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் 500mAh பேட்டரி கொண்டிருக்கிறது. மேலும் இதன் இயர்போன்கள் 13mm டைனமிக் டிரைவர்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களில் இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ரூ. 999 விலையில் கிடைக்கும் ட்ரூக் ஃபிட் ப்ரோ இந்தியாவில் ரெட்மி இயர்பட்ஸ் எஶ் மற்றும் ரியல்மி பட்ஸ் கியூ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.