ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தவறுதலாக அமேசான் வலைதளத்தில் லீக் ஆன டீசர் வலைதள பக்கத்தில் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனின் ஏஆர் வெளியீட்டு நிகழ்வுக்கான அழைப்பிதழ் இடம்பெற்று இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் கொண்டு உருவாகி இருக்கும் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் விலை 500 டாலர்களுக்குள் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி ஒன்பிளஸ் சார்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், அமேசான் மூலம் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி விவரங்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக இந்தியா மற்றும் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.