ரூ. 14 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் விவோ வை30 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று (ஜூலை 3) இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. புதிய விவோ வை30 ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ வை30 சிறப்பம்சங்கள்:

  • 6.47 inch HD+ 720×1560 பிக்சல் LCD டிஸ்ப்ளே
  • ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
  • 4GB ரேம்
  • 128GB மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • 13MP பிரைமரி கேமரா, f/2.2
  • 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
  • 2MP டெப்த் சென்சார், f/2.4
  • 2MP சென்சார், f/2.4
  • 8MP செல்ஃபி கேமரா, f/2.05
  • கைரேகை சென்சார்
  • 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக்
  • யுஎஸ்பி டைப்-சி
  • 5000mAh பேட்டரி

இந்தியாவில் விவோ வை30 ஸ்மார்ட்போன் விலை ரூ. 14990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டேசில் புளூ மற்றும் எமரால்டு பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.