அழிக்கப்பட்ட தரவுகளை மீட்கும் இலவச மைக்ரோசாப்ட் செயலி அறிமுகம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலவச டேட்டா ரிக்கவரி செயலி Windows File Recovery எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்தி, அழிக்கப்பட்ட தரவுகளை மீட்க முடியும். இதை கொண்டு டாக்யூமென்ட்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்று அழிக்கப்பட்ட தரவுகளை மீட்க முடியும்.

புதிய Windows File Recovery செயலி மைக்ரோசாப்ட் ஸ்டோரில் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். இந்த செயலியை பயன்படுத்தி கனெக்ட்டெட் கேமரா அல்லது எஸ்டி கார்டு போன்ற சாதனங்களில் இருந்தும் அழிக்கப்பட்ட தரவுகளை மீட்க முடியும்.

இந்த செயலி NTFS, FAT, exFAT மற்றும் ReFS ஃபைல் சிஸ்டம்களையும் JPEG, PDF, PNG, MPEG, Office, MP3, MP4, ZIP ஃபார்மேட்களையும் இயக்கும் திறன் கொண்டிருக்கிறது. டீஃபால்ட் (Default), செக்மென்ட் (Segment) மற்றும் சிக்னேச்சர் (Signature) என மூன்று வித மோட்களை கொண்டுள்ளது.

இதில் டீஃபால்ட் மோட் கொண்டே பெரும்பாலான தரவுகளை அதிகபட்சம் 4GB அல்லது அதற்கும் அதிக மெமரி கொண்டவற்றை மீட்க முடியும் என மைக்ரோசாப்ட் பரிந்துரைக்கிறது. செக்மென்ட் மோட் கொண்டு நீண்ட நாட்களுக்கு முன் அழிக்கப்பட்ட தரவுகளை மீட்க முடியும். இந்த மோட் கொண்டு ஃபார்மேட் செய்யப்பட்ட டிஸ்க்குகளையும் ரிக்கவர் செய்யலாம்.

சிக்னேச்சர் மோட் கொண்டு கண்டறியப்படாத ஃபைல்களை ரிக்கவர் செய்ய முடியும். புதிய Windows File Recovery செயலி விண்டோஸ் 10 பில்டு 19041 மற்றும் அதன்பின் வெளியான பதிப்புகளில் மட்டுமே இயங்கும். பயனர்கள் இதனை மைக்ரோசாப்ட் ஸ்டோரில் இருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

இந்த செயலியை பயன்படுத்தி கிளவுட் ஸ்டோரேஜ் ரிக்கவரி மற்றும் நெட்வொர்க் ஃபைல் ஷேரிங் உள்ளிட்டவற்றை இயக்க முடியாது.