17 நிமிடங்களில் அதிவேகமாக சார்ஜ் ஆகும் சியோமி ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 100 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சியோமி நிறுவனம் தனது 100 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜ் டர்போ தொழில்நுட்பத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

இந்த தொழில்நுட்பம் 4000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனினை முழுமையாக 17 நிமிடங்களில் சார்ஜ் செய்திடும். இதுதவிர சியோமி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின் இந்த தொழில்நுட்பம் இந்திய சந்தையில் வெளியிடப்படும் என தெரிவித்தார். எனினும், இதுபற்றி வேறு எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

சீன சமூக வலைதளமான வெய்போவில் வெளியாகி இருக்கும் தகவல்களில், 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை சியோமி வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது எந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என்றும் இதன் வெளியீட்டு தேதி பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் என்ற வகையில், இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 875 பிராசஸர் கொண்ட ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டே அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.