டிக்டாக் செயலிக்கு மாற்றான சிங்காரி ஆப் – பிளே ஸ்டோர் டவுன்லோட்களில் புதிய மைல்கல் எட்டியது

டிக்டாக் செயலிக்கு மாற்றாக உருவாகி இருக்கும் மேட் இன் இந்தியா செயலி சிங்காரி பிளே ஸ்டோரில் பத்து லட்சத்திற்கும் அதிக டவுன்லோட்களை கடந்துள்ளது.

புதிய வீடியோ சார்ந்த செயலி வெளியான 72 மணி நேரத்தில் 5 லட்சம் டவுன்லோட்களையும், பத்து நாட்களில் 5.5 லட்சம் டவுன்லோட்களை கடந்ததாக இந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

சிங்கரி செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் 400 மடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இந்த செயலியை உருவாக்கி இருக்கும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்டாக் போன்றே சிங்காரி செயலியை கொண்டும் பயனர்கள் வீடியோக்களை டவுன்லோட் செய்து அவற்றில் சில அம்சங்களை சேர்த்து அப்லோட் செய்ய முடியும்.

இந்த செயலி ஆங்கிலம், இந்தி, தமிழ், பங்களா, குஜராத்தி, மராத்தி, கன்னடா, பஞ்சாபி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கிறது. பயனர்கள் இதனை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம்.