சோனி WF-XB700 மற்றும் WF-SP800N ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

சோனி நிறுவனத்தின் WF-XB700 மற்றும் WF-SP800N ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சோனி WF-XB700 மாடலில் 12எம்எம் டிரைவர்களும் சோனியின் எக்ஸ்டிரா பேஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் இது பயனர்களின் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய WF-SP800N மாடலில் நாய்ஸ் கேன்சலிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் IP55தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. சீரான ப்ளூடூத் இணைப்பு, நீண்ட பேட்டரி பேக்கப் மற்றும் எக்ஸ்டிரா பேஸ் வழங்கப்பட்டுள்ளது.

சோனி WF-XB700 சிறப்பம்சங்கள்

 • 12எம்எம் டிரைவர்கள்
 • எக்ஸ்டிரா பேஸ்
 • ட்ரூலி வயர்லெஸ் வடிவமைப்பு
 • ப்ளூடூத் 5 தொழில்நுட்பம்
 • காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வடிவமைப்பு
 • அம்சங்களை இயக்க பட்டன்கள்
 • வாட்டர் ரெசிஸ்டண்ட்
 • 9 மணி நேர பேட்டரி பேக்கப்
 • சார்ஜிங் கேசுடன் 18 மணி நேர பேக்கப்

சோனி WF-SP800N சிறப்பம்சங்கள்

 • எக்ஸ்டிரா பேஸ்
 • ப்ளூடூத் 5 தொழில்நுட்பம்
 • டிஜிட்டல் நாய்ஸ் கேன்சலிங்
 • அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல்
 • இன்ட்யூட்டிவ் டச் கண்ட்ரோல்
 • அம்சங்களை இயக்க பட்டன்கள்
 • வாட்டர் ரெசிஸ்டண்ட்
 • 9 மணி நேர பேட்டரி பேக்கப்
 • நாய்ஸ் கேன்சலிங் அம்சம் பயன்படுத்தினால் சார்ஜிங் கேசுடன் 18 மணி நேர பேக்கப்
 • நாய்ஸ் கேன்சலிங் அம்சம் பயன்படுத்தாத போது சார்ஜிங் கேசுடன் 26 மணி நேர பேக்கப்

சோனி WF-ZB700 இயர்போன் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சோனி WF-SP800N இயர்போன் பிளாக், புளூ மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 18990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.