இந்தியாவில் இரு ரியல்மி ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு

ஸ்மார்ட்போன்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதால் இந்தியாவில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இதன் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. ரியல்மி சி3 ஸ்மார்ட்போனுடன் ரியல்மி நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

ரியல்மி நார்சோ 10ஏ 3GB+32GB மெமரி வேரியண்ட் விலை முந்தைய ரூ. 8499 இல் இருந்து தற்சமயம் ரூ. 8999 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனின் விலை உயர்த்தப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக ரியல்மி நார்சோ 10ஏ 4GB+64GB மெமரி வேரியண்ட் ரூ. 9999 விலையில் வெளியிடப்பட்டது.

ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் 3GB+32GB வேரியண்ட் ரூ. 7999 இல் இருந்து ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ. 8999 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதன் 4GB+64GB வேரியண்ட் தற்சமயம் ரூ. 9999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வேரியண்ட் ரூ. 8999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இந்திய சந்தையில் ரியல்மி சி3 அறிமுகம் செய்யப்பட்டது முதல், இதன் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. உயர்த்தப்பட்ட விலை ரியல்மி அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஃப்ளிப்கார்ட்டில் மாற்றப்பட்டுவிட்டது.