ரூ. 7999 துவக்க விலையில் மோட்டோரோலா AmphisoundX ஹோம் தியேட்டர் சிஸ்டம்கள் இந்தியாவில் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் AmphisoundX ஹோம் தியேட்டர் சிஸ்டம்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

ஃப்ளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்படும் புதிய ஹோம் தியேட்டர்கள் 80W, 150W மற்றும் 160W ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய ஹோம் தியேட்டர்களில் பல்வேறு ஸ்பீக்கர்களும், கூடுதலாக ப்ளூடூத் வசதியும் கொண்டிருக்கின்றன.

இத்துடன் தனியே சப்-வூஃபர்கள் மற்றும் HDMI ARC, ஆப்டிக்கல் ஆடியோ மற்றும் யுஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் கொண்டிருக்கின்றன. மேலும் இவற்றில் அதிகபட்சமாக 8 இன்ச் பேஸ் டிரைவர் வழங்கப்பட்டுள்ளன.

மோட்டோரோலா AmphisoundX 80W ஹோம் தியேட்டர் விலை ரூ. 7999 என்றும் மோட்டோரோலா AmphisoundX 150W மற்றும் AmphisoundX 160W ஹோம் தியேட்டர்களின் விலை ரூ. 10999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.