ஆண்ட்ராய்டு 11 பீட்டா அப்டேட் பெறும் ரெட்மி ஸ்மார்ட்போன்

சியோமியின் ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 பீட்டா 1 வெளியிடப்படுகிறது. முதற்கட்டமாக சீனாவில் இந்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே போக்கோ எஃப்2 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கும் இதேபோன்ற அப்டேட் வெளியிடப்பட்டது.

ஆண்ட்ராய்டு 11 பீட்டா 1 மற்ற ஸ்மார்ட்போன்களில் உள்ளதை போன்றே இரு சியோமி சார்ந்த ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் வழங்கப்படுகிறது. இவற்றில் சியோமியின் MIUI இன்டர்ஃபேஸ் வழங்கப்படவில்லை. இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் பிராஜக்ட் (AOSP) சார்ந்து இயங்குகிறது. இது உண்மையான ஆண்ட்ராய்டு பதிப்பு ஆகும்.

புதிய அப்டேட் பற்றிய விவரங்களை சியோமி தனது வெய்போ அக்கவுண்ட்டில் அறிவித்தது. ஆண்ட்ராய்டு 11 பீட்டா உண்மையில் டெவலப்பர்களுக்கானது ஆகும். இதை கொண்டு டெவலப்பர்கள் தங்களது செயலி புதிய ஆண்ட்ராய்டு தளத்தில் சீராக இயங்க வைக்க முடியும் என சியோமி தெரிவித்துள்ளது.

மேலும் புதிய அப்டேட் செய்யும் முன் வாடிக்கையாளர்கள் தங்களின் தரவுகளை பேக்கப் செய்து கொள்ளவும் சியோமி எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனில் புதிய ஆண்ட்ராய்டு 11 பீட்டா 1 பதிப்பை இன்ஸ்டால் செய்ய பயனர்கள் எம்ஐ கம்யூனிட்டி வலைதளத்தில் இருந்து .tgz எனும் எக்ஸ்டென்ஷன் ஃபைலினை டவுன்லோடு செய்ய வேண்டும்.