வாங்கிய 24 மணி நேரத்தில் வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன் – உடனடி பதில் அளித்த நிறுவனம்

இந்திய சந்தையில் அதிரடி சிறப்பம்சங்களுடன் குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ரியல்மி XT கொண்டிருக்கிறது.

தற்சமயம் ரியல்மி XT ஸ்மார்ட்போனை வாங்கிய பயனர் ஒருவர் தான் வாங்கிய ஸ்மார்ட்போன் முதல் நாள் முடிவதற்குள் வெடித்து சிதறியதாக தெரிவித்திருக்கிறார். ஸ்மார்ட்போனுடன் வழங்கப்பட்ட சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்த போதே ஸ்மார்ட்போன் வெடித்து விட்டதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து தனியார் செய்து நிறுவனத்துக்கு பதில் அளித்துள்ள ரியல்மி, ஸ்மார்ட்போனுக்கு வெளிப்புற அழுத்தம் கொடுக்கப்பட்டதால், அதன் பேட்டரி வெடித்து ஸ்மார்ட்போன் தீப்பிடித்து விட்டது என தெரிவித்துள்ளது.

எனினும், ‘ஸ்மார்ட்போனை தீயில் பறிகொடுத்த வாடிக்கையாளர் ரியல்மி நிறுவனம் வெடித்து சிதறிய புகைப்படங்களை பார்த்தே அதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ட்விட்டரில் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறிய சம்பவத்துக்கு விசாரணை மேற்கொள்வதாக ரியல்மி தெரிவித்தது. எனனும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என அவர் தெரிவித்தார்.