ரூ. 12 ஆயிரம் பட்ஜெட்டில் வு ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்

வு நிறுவனம் இந்தியாவில் வு சினிமா ஸ்மார்ட் டிவி சீரிசில் 32 இன்ச் ஹெச்டி மற்றும் 43 இன்ச் ஃபுல் ஹெச்டி வேரியண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு சினிமா டிவி சீரிஸ் இந்தியாவில் அல்ட்ரா ஹெச்டி ரெசல்யூஷனில் மூன்று மாடல்களை அறிமுகம் செய்தது.

தற்சமயம் இதே சீரிஸ் குறைந்த விலை மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூன் 23 ஆம் தேதி துவங்குகிறது.

வு சினிமா டிவி 32 இன்ச் / 43 இன்ச் சிறப்பம்சங்கள்:

  • 32 இன்ச் 1366×768 பிக்சல் / 43 இன்ச் 1920×1080 பிக்சல் எல்இடி டிஸ்ப்ளே
  • அடாப்டிவ் லுமா கண்ட்ரோல், டிஜிட்டல் MPEG நாய்ஸ் ரிடக்ஷன், பிசி, கேம் மற்றும் கிரிக்கெட் மோட்
  • குவாட்கோர் பிராசஸர், டூயல் கோர் ஜிபியு
  • 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி
  • ஆண்ட்ராய்டு டிவி 9.0, குரோம்காஸ்ட் பில்ட்-இன், ஸ்கிரீன் மிரரிங்
  • வைபை, ப்ளூடூத், 43 இன்ச் மாடலில் 3x HDMI, 32 இன்ச் மாடலில் 2x HDMI
  • 43 இன்ச் மாடலில் 2X யுஎஸ்பி, 32 இன்ச் மாடலில் 1x யுஎஸ்பி
  • ஈத்தர்நெட், ஆக்ஸ், ஆப்டிக்கல் ஆடியோ அவுட்
  • நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப், கூகுள் பிளே, கூகுள் அசிஸ்டண்ட்
  • 40 வாட் சவுண்ட்பார் மற்றும் மாஸ்டர் ஸ்பீக்கர், ட்வீட்டர், டால்பி ஆடியோ, ஆடியோ ஈக்வலைசர்

வு சினிமா ஸ்மார்ட் டிவி 32 இன்ச் மாடல் விலை ரூ. 12999 என்றும் 43 இன்ச் மாடலின் விலை ரூ. 21999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.