ரியல்மி நார்சோ 10ஏ புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்

ரியல்மி பிராண்டு நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் 3GB ரேம், 32GB மெமரி கொண்டிருந்தது. தற்சமயம் நார்சோ 10ஏ ஸ்மார்ட்போன் 4GB ரேம், 64GB மெமரி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மெமரி தவிர இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனில் 6.52 inch HD+ மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் ஸ்மார்ட்போனின் பின்புறம் ஸ்கிராட்ச் ப்ரூஃப் டெக்ஸ்ச்சர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் கைரேகை சென்சார், 5000mAh பேட்டரி, ரிவர்ஸ் சார்ஜிங், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி நார்சோ 10ஏ சிறப்பம்சங்கள்:

 • 6.5-inch 1600720 பிக்சல் HD+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ்
 • ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்
 • ARM Mali-G52 2EEMC2 GPU
 • 3GB LPDDR4x ரேம், 32GB eMMC 5.1 மெமரி
 • 4GB LPDDR4x ரேம், 64GB eMMC 5.1 மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கு்ம வசதி
 • டூயல் சிம் ஸ்லாட்
 • ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
 • 12MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ், PDAF
 • 2MP டெப்த் சென்சார், f/2.4
 • 2MP 4cm மேக்ரோ சென்சார், f/2.4
 • 5MP செல்ஃபி கேமரா
 • 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ
 • ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
 • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
 • மைக்ரோ யுஎஸ்பி
 • 5000mAh பேட்டரி
 • 10W சார்ஜிங்

இந்தியாவில் ரியல்மி நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனின் 4GB ரேம், 64GB மெமரி வேரியண்ட் விலை இந்தியாவில் ரூ. 9999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.