சோனி பிராவியா 43 inch மற்றும் 55 inch ஸ்மார்ட் டிவிக்கள் இந்தியாவில் அறிமுகம்

சோனி நிறுவனம் இந்திய சந்தையில் W6603 மற்றும் X70G சீரிஸ் பிராவியா டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இரு டிவி மாடல்களிலும் X ரியாலிட்டி ப்ரோ பிக்ச்சர் பிராசஸிங், மோஷன்ஃபுளோ XR, HDR கேமிங், X ப்ரோடெக்ஷன் ப்ரோ மற்றும் பல்வேறு அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய X70G 55 inch 4K மாடலில் 4K X ரியாலிட்டி ப்ரோ, பேஸ் ரிஃப்ளெக்ஸ் ஸ்பீக்கர், மல்டி ஃபார்மட் யுஎஸ்பி பிளே மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

சோனி பிராவியா W6603 43 inch சிறப்பம்சங்கள்:

 • 43 inch 1920×1080 பிக்சல் டைரெக்ட் LED டிஸ்ப்ளே
 • லினக்ஸ் சார்ந்த ஸ்மார்ட் டிவி ஒஎஸ்
 • யூடியூப், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் பல்வேறு சேவைகள்
 • வைபை, 1xHDMI, 2X USB, ஸ்மார்ட் பிளக் மற்றும் பிளே, ஈத்தர்நெட்
 • 2 x 10வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், DTS ஆடியோ, டால்பி ஆடியோ, க்ளியர் ஆடியோ பிளஸ், எஃப்எம் ரேடியோ

சோனி பிராவியா X70G 55 inch சிறப்பம்சங்கள்:

 • 55 inch 3840×2160 பிக்சல் டைரெக்ட் LED டிஸ்ப்ளே
 • லினக்ஸ் சார்ந்த ஸ்மார்ட் டிவி ஒஎஸ்
 • யூடியூப், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் பல்வேறு சேவைகள்
 • வைபை, 1 x HDMI, 2 X USB, ஸ்மார்ட் பிளக் மற்றும் பிளே, ஈத்தர்நெட்
 • மீடியா கனெக்ட், போட்டோ ஷேரிங் பிளஸ்
 • 2 x 10வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், DTS ஆடியோ, டால்பி ஆடியோ, க்ளியர் ஆடியோ பிளஸ், எஃப்எம் ரேடியோ

இந்தியாவில் சோனி பிராவியா W6603 43 inch மற்றும் X70G 55 inch 4K டிவிக்கள் விலை முறையே ரூ. 37990 மற்றும் ரூ. 63990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.