பிரீமியம் அம்சங்களுடன் பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய இருக்கும் மைக்ரோமேக்ஸ்

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் மூன்று புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ஒரு ஸ்மார்ட்போன் அதிநவீன தோற்றத்தில் பிரீமியம் அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் இது பட்ஜெட் விலையில் அறிமுகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் சீனா இடையே போர் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மைக்ரோமேக்ஸ் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியர்களுக்காக இந்தியர்களால் உருவாக்கப்பட்டுள்ளது என மைக்ரோமேக்ஸ் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது.

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அடுத்த மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என்றும் இவை ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

நாங்கள் மிக கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறோம், விரைவில் மிகப்பெரியதாக ஒன்றை வெளியிடுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் என மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.