வோடபோன் ஐடியா ரூ. 251 சலுகை அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ. 251 பிரீபெயிட் சலுகை தற்சமயம் நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட சில வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில வட்டாரங்களில் மட்டும் வழங்கப்பட்டிருந்த ரூ. 251 சலுகை அதன்பின் இதர வட்டாரங்களிலும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த வரிசையில் தற்சமயம் இச்சலுகை அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா ரூ. 251 சலுகையில் 50 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதுதவிர டாக்டைம் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இச்சலுகை பெரும்பாலும் அதிக டேட்டா தேவைப்படுவோருக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டைம் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற பலன்களை பெற வாடிக்கையாளர்கள் கூடுதலாக மற்ற பலன்களில் ஒன்றை ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். முன்னதாக இந்த சலுகை நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் வீட்டில் இருந்து பணி செய்வோருக்கு உபயோகப்படும் என்ற நோக்கில் வெளியிடப்பட்டது.