இந்தியாவில் நோக்கியா 5310 அறிமுகம்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 5310 ஃபீச்சர் போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய மொபைல் போனில் எம்பி3 பிளேயர், மைக்ரோ எஸ்டி ஸ்லாட், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, டூயல் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

நோக்கியா 5310 சிறப்பம்சங்கள்:

 • 2.4 இன்ச் 320×240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
 • MT6260A பிராசஸர்
 • 8MB ரேம்
 • 16MB மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • டூயல் சிம்
 • சீரிஸ் 30 பிளஸ் ஒஎஸ்
 • VGA பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
 • 3.5mm ஆடியோ ஜாக், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ
 • 2ஜி, ப்ளூடூத் 3.9, மைக்ரோ யுஎஸ்பி
 • 1200mAh பேட்டரி

நோக்கியா 5310 மொபைல் போன் வைட் / ரெட் மற்றும் பிளாக் / ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 3399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் துவங்கியுள்ளது. விற்பனை ஜூன் 23 ஆம் தேதி துவங்குகிறது.