ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 5000mAh பேட்டரி கொண்ட மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போனில் 6.5 inch FHD+ 19.5:9 டோட்டல் விஷன் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 6GB ரேம், 128GB மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் கிளாஸி ஃபினிஷ், வளைந்த எட்ஜ்கள், பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.

மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் சிறப்பம்சங்கள்

  • 6.5 inch 2340×1080 பிக்சல் FHD+ டோட்டல் விஷன் டிஸ்ப்ளே
  • ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
  • அட்ரினோ 618 GPU
  • 6GB ரேம்
  • 128GB மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • டூயல் சிம்
  • ஆண்ட்ராய்டு 10
  • 64MP பிரைமரி கேமரா, F/1.8, 0.8μm
  • 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், F/2.2, 1.12μm
  • 5MP மேக்ரோ கேமரா, F/2.4, 1.12μm
  • 2MP டெப்த் கேமரா, F/2.4, 1.75μm
  • 16MP செல்ஃபி கேமரா, F/2.2, 1μm
  • கைரேகை சென்சார்
  • 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக்
  • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி
  • 5000mAh பேட்டரி
  • 15 டர்போ பவர் சார்ஜிங்

மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் மூன்லைட் வைட் மற்றும் டுவிலைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூன் 24 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.