ஸ்மார்ட்போன்களை பத்து முறை சார்ஜ் செய்யும் சியோமி பவர் பேங்க்

சியோமி நிறுவனத்தின் எம்ஐ பவர் பேங்க் 3 மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த 20000 எம்ஏஹெச் எம்ஐ பவர் பேங்க் 3 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

புதிய பவர் பேங்க் 24 வாட் யுஎஸ்பி டைப்-சி இன்புட், 18 வாட் அவுட்புட் மூலம் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்குகிறது. இந்த பவர் பேங்க் கொண்டு சியோமியின் எம்ஐ 10 மற்றும் ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன்களை 4.5 முறையும், ஐபோன் எஸ்இ 2020 மாடலை 10.5 முறை சார்ஜ் செய்ய முடியும்.

இது பாலிகார்பனேட் மற்றும் ஏபிஎஸ் பாடி கொண்டிருக்கிறது. இதில் இரு யுஎஸ்பி டைப்-ஏ போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அதிகபட்சமாக 18வாட் அவுட்புட் வழங்குகிறது. மேலும் இதில் எல்இடி சார்ஜ் இன்டிகேட்டர்களும், பக்கவாட்டில் பட்டன் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதில் உள்ள லோவர் பவர் மோட் கொண்டு எம்ஐ பேண்ட் மற்றும் ஹெட்செட் போன்ற அக்சஸரீக்களை சார்ஜ் செய்ய முடியும். சியோமி 30000 எம்ஏஹெச் எம்ஐ பவர் பேங்க் 3 பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 169 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 1810 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய சியோமி பவர் பேங்க் மாடலை விமானங்களில் கொண்டு செல்ல முடியாது. தற்போதைய விதிமுறைகளின் படி விமானங்களில் அதிகபட்சமாக 20000 எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரிகளை மட்டுமே கொண்டு செல்ல முடியும். இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.