ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தாவினை இலவசமாக வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தாவினை இலவசமாக வழங்கி வருகிறது. ரூ. 999 மதிப்புள்ள அமேசான் பிரைம் சந்தாவில் வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம்.

புதிய சலுகை மைஜியோ செயலியில் காணப்படுகிறது. தற்போதைய தகவல்களின் படி ஜியோ ஃபைபர் சில்வர் சலுகையை பயன்படுத்துவோருக்கு மட்டுமே அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மாதாந்திர வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற அறிவிப்பு வழங்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் அமேசான் பிரைம் சந்தா காலாண்டு, அரையாண்டு மற்றும் ஒரு வருட சலுகைகளை தேர்வு செய்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அமேசான் நிறுவன தகவல்களின் படி, புதிய பிரைம் சந்தா பயன்பாட்டில் இருக்கும் போது இந்த சலுகையை பயன்படுத்த முடியாது என கூறப்படுகிறது.

இதனால் ஏற்கனவே அமேசான் பிரைம் பயன்படுத்துவோர், அதற்கான வேலிடிட்டி முடியும் வரை காத்திருக்க வேண்டும். அல்லது புதிதாக அமேசான் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம்.