48MP குவாட் கேமரா, 5000mAh பேட்டரி கொண்ட கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர், 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி மேக்ரோ கேமரா, 20 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ31 சிறப்பம்சங்கள்:

  • 6.4 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
  • ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர்
  • ARM மாலி-G52 GPU
  • 6 ஜிபி LPDDR4x ரேம்
  • 128 ஜிபி மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0
  • டூயல் சிம் ஸ்லாட்
  • 48MP பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், f/2.0
  • 8MP 123° அல்ட்ரா-வைடு ஆங்கில் கேமரா, f/2.2
  • 5MP டெப்த் சென்சார், f/2.4
  • 5MP மேக்ரோ சென்சார், f/2.4
  • 20MP செல்ஃபி கேமரா, f/2.2
  • கைரேகை சென்சார்
  • சாம்சங் பே
  • 3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
  • டூயல் 4G வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  • யுஎஸ்பி டைப்-சி
  • 5000mAh பேட்டரி
  • 15W ஃபாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் ப்ரிசம் கிரஷ் பிளாக், ப்ரிசம் கிரஷ் புளூ, ப்ரிசம் கிரஷ் ரெட் மற்றும் ப்ரிசம் கிரஷ் வைட் நிறங்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் இதன் விலை ரூ. 21,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஃப்ளிப்கார்ட், அமேசான், சாம்சங் இந்தியா வலைதளம், சம்சங் ஒபேரா ஹவுஸ் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.