விவோ எக்ஸ்50 சீரிஸ் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டது

விவோ நிறுவனத்தின் எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ மற்றும் எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்சமயம் இவற்றின் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டை விவோ இந்தியா தலைமை செயல் அதிகாரி ஜெரோம் சென் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார். எனினும், ஸ்மார்ட்போன்களின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. விவோ எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் தர பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.

புதிய எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 5ஜி வசதி வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்தியாவில் விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாக இருக்கும் ஒப்போ ரெனோ 4, ஒன்பிளஸ் இசட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.