சியோமியின் எம்ஐ நோட்புக் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

சியோமி நிறுவனம் தனது எம்ஐ நோட்புக் இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. புதிய லேப்டாப் சர்வதேச அறிமுக நிகழ்வு இந்தியாவில் நடைபெற்று, இந்திய சந்தைக்கான பிரத்யேக சாதனமாக இருக்கும் என சியோமி தெரிவித்துள்ளது.

புதிய சியோமி லேப்டாப் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய லேப்டாப் மெல்லிய வடிவமைப்பு, ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே, நீண்ட பேட்டரி பேக்கப் வழங்கும் என சியோமி ஏற்கனவே அறிவித்தது.

முன்னதாக சியோமியின் புதிய லேப்டாப் இந்திய வரவை ட்விட்டரில் டீசர்களாக அந்நிறுவனம் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தற்சமயம் புதிய லேப்டாப் மாடல்களுக்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.