இந்தியாவில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை மீண்டும் உயர்வு

இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை உயர்த்தின. அந்த வரிசையில் போக்கோ பிராண்டும் தனது எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலையை உயர்த்தியது.

இந்நிலையில், போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இதன் விலை ரூ. 500 உயர்த்தப்பட்ட நிலையில், தற்சமயம் இதன் விலை மீண்டும் ரூ. 500 உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனால் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 17,499 என மாற்றப்பட்டுள்ளது.

போக்கோ எக்ஸ்2 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 18,499 என மாற்றப்பட்டுள்ளது. இதன் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இது ரூ. 20,999 எனும் முந்தைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. மாற்றப்பட்ட புதிய விலை ப்ளிப்கார்ட் தளத்திலும் மாற்றப்பட்டு விட்டது.