இந்தியாவில் ஐகூ 3 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி சலுகை அறிவிப்பு

ஐகூ பிராண்டின் ஐகூ3 முதல் ஸ்மார்ட்போனாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு ரூ. 36990 விலையில் விற்பனை செய்யப்பட்டு சமீபத்தில் இதன் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 34,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு பிரத்யேக சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பயனர்கள் புதிய ஐகூ 3 ஸ்மார்ட்போனினை ரூ. 31,990 விலையில் வாங்கிட முடியும். தற்சமயம் ஐகூ 3 ஸ்மார்ட்போன் ரூ. 34,990 விலையிலேயே விற்பனை செய்யப்படும் நிலையில் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. உடனடி தள்ளுபடி ஐகூ 3 அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

அந்த வகையில் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்துவோர் ரூ. 31,990 விலையில் புதிய ஐகூ 3 ஸ்மார்ட்போனினை வாங்கிட முடியும். ஐகூ3 மிட்-வேரியண்ட் மற்றும் டாப்-எண்ட் வேரியண்ட் மாடல்களும் தள்ளுபடி சலுகையின் கீழ் முறையே ரூ. 34,990 மற்றும் ரூ. 37,990 விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு அல்லது மாத தவணை முறையில் ஐகூ 3 ஸ்மார்ட்போனை வாங்கும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை இன்று (மே 29) துவங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை ப்ளிப்கார்ட் மற்றும் ஐகூ அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வழங்கப்படுகிறது.

ஐகூ 3 சிறப்பம்சங்கள்:

 • 6.44 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 20:9 E3 சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
 • 2.84 Ghz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
 • அட்ரினோ 650 GPU
 • 8 ஜிபி LPDDR5 ரேம் / 128 ஜிபி (UFS 3.1) மெமரி
 • 8 ஜிபி LPDDR5 ரேம் / 256 ஜிபி (UFS 3.1) மெமரி
 • 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
 • ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐகூ யுஐ 1.0
 • டூயல் சிம் ஸ்லாட்
 • 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, எல்இடி ஃபிளாஷ், EIS
 • 13 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.46
 • 13 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
 • 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
 • 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.45
 • இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
 • 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
 • 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1
 • யுஎஸ்பி டைப்-சி
 • 4440 எம்ஏஹெச் பேட்டரி
 • 55 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ்

ஐகூ 3 ஸ்மார்ட்போனின் டாப் எண்ட் வேரியண்ட்டில் மட்டும் 5ஜி வசதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற இரு வேரியண்ட்களில் 4ஜி நெட்வொர்க் மட்டுமே பயன்படுத்த முடியும்.