ரூ. 8499 விலையில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 மற்றும் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இரு ஸ்மார்ட்போன்களும் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகி இருக்கின்றன. புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன்கள் பன்ச் ஹோல் கொண்ட விலை குறைந்த மாடல்கள் ஆகும்.

இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 சிறப்பம்சங்கள்:

இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 12 நானோமீட்டர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், IMG பவர் விஆர் GE8320 GPU, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 6.0 கஸ்டம் யுஐ மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் லோ-லைட் சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் மூன்று எல்இடி ஃபிளாஷ், முன்புறம் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதியும், 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5 மற்றும் ஜிபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ சிறப்பம்சங்கள்:

இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், IMG பவர் விஆர் GE8320 GPU, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 6.0 கஸ்டம் யுஐ மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் லோ-லைட் சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதியும், 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5 மற்றும் ஜிபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8499 என்றும் ஹாட் 9 ப்ரோ மாடல் விலை ரூ. 9499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது.