விரைவில் இந்தியா வரும் சியோமி லேப்டாப்

சியோமி நிறுவனம் சீன சந்தையில் அதிக லேப்டாப் மாடலை விற்பனை செய்து வருகிறது. இந்திய சந்தையில் இவை அதிகம் எதிர்பார்க்கப்பட்டு இருந்தன. அந்த வகையில் சியோமி நிறுவனம் தனது Mi லேப்டாப் மாடல்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

சியோமி இந்தியா மற்றும் அதன் நிறுவன அதிகாரிகள் புதிய லேப்டாப் வெளியீடுகளை உணர்த்தும் வகையில் வீடியோ டீசர்களை வெளியிட்டது. சியோமி இந்தியா ட்வீட் விவரங்களின் படி ரெட்மி புக் லேப்டாப் மாடல்கள் இந்தியாவில் Mi லேப்டாப் மாடலாக வெளியிட இருக்கிறது.

புதிய லேப்டாப் மாடல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.