வைபை, கூகுள் அசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட் டியூப் லைட் இந்தியாவில் அறிமுகம்

எல்இடி லைட் மற்றும் வீட்டு உபயோக மின்சாதன பொருட்களை உற்பத்தி செய்யும் சிஸ்கா நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டியூப் லைட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

புதிய சிஸ்கா ஸ்மார்ட் டியூப் லைட் 20வாட் வாய்ஸ் கண்ட்ரோல் அம்சம் கொண்டிருக்கிறது. இந்த டியூப் லைட் வைபை வசதி கொண்டிருக்கிறது. இதனை சிஸ்கா ஸ்மார்ட் ஹோம் செயலி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் அல்லது அலெக்சா மூலம் இயக்கலாம்,

ஸ்மார்ட் டியூப் லைட் – சிங்கிள் சேனல் (6500k) மற்றும் 3 இன் 1 சேனல் (3000k-4000k-6500k) வேரியபிள் பிரைடனஸ் கண்ட்ரோல் அதாவது டியூப் லைட் பிராகசத்தன்மையை 1600-2000 லூமென்கள் வரை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். வைபை மற்றும் சிஸ்கா ஸ்மார்ட் ஹோம் ஆப் உடன் இணைக்கப்பட்டால் பயனர்கள் வீட்டில் இருக்கும் டியூப் லைட்டை வைபை மூலம் உலகின் எந்த பகுதியில் இருந்தும் இயக்க முடியும்.

மேலும் ஒவ்வொரு ஸ்மார்ட் டியூபிற்கும் வாடிக்கையாளர்கள் விரும்பும் பெயரை சூட்டிக் கொண்டு, வாய்ஸ் கமாண்ட் மூலம் டியூப் லைட்டினை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம்.

சிஸ்கா ஸ்மார்ட் டியூப் லைட் விரைவில் ஆன்லைன் விற்பனை மையங்களில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சிங்கிள் சேனல் டியூப் விலை ரூ. 1,999 என்றும் 3-இன்-1 சேனல் விலை ரூ. 2,199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.