இந்தியாவில் ரூ. 12,999 விலையில் ஒனிடா ஸ்மார்ட் டிவி அறிமுகம்

ஒனிடா ஃபயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய ஸ்மார்ட் டிவி சீரிஸ் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. இவற்றின் விற்பனை டிசம்பர் 20 ஆம் தேதி அமேசான் தளத்தில் துவங்குகிறது.

ஒனிடா ஃபயர் டிவி எடிஷனில் ஃபயர் டிவி மென்பருள் வழங்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ஸ்டிரீமிங் சேவைகளை பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. அந்த வகையில் ஃபயர் டிவி மாடல்களில் அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், யூடியூப் மற்றும் பல்வேறு இதர சேவைகளை பயன்படுத்தலாம்.

இந்த டிவி நேரடியாக இண்டர்நெட் உடன் இணைந்து கொண்டு பல்வேறு செயலிகள் மற்றும் சேவைகளில் இருந்து தரவுகளை ஸ்டிரீம் செய்கிறது. புதிய ஃபயர் டிவி பிளாட்ஃபாம் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் 4K மற்றும் இதர சாதனங்களை போன்றே இயங்குகிறது.

இரு ஸ்மார்ட் டிவி மாடல்களின் ரெசல்யூஷன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. எனினும், 32 இன்ச் மாடலில் ஹெச்டி ஸ்கிரீன் வழங்கப்படலாம் என்றும் 43 இன்ச் டிவியில் ஃபுல் ஹெச்டி ரெசல்யூஷன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் ஃபயர் டிவி எக்ஸ்பீரியன்ஸ் தரவுகளை தொலைகாட்சிகளில் உள்ள அதிக ரெசல்யூஷனில் ஸ்டிரீம் செய்யும். இந்த டிவிக்களில் மூன்று ஹெச்டிஎம்ஐ போர்ட், வாய்ஸ் ரிமோட், வாய்ஸ் கமாண்ட் வசதி போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர டிவியுடன் வரும் ரிமோட் கண்ட்ரோலில் பிரைம் வீடியோ, நெட்ஃப்ளிக்ஸ், ஜீ5 மற்றும் சோனி லிவ் போன்ற சேவைகளை வேகமாக இயக்க வழி செய்யும் க்விக் அக்சஸ் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஒனிடா ஃபயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவி 32 இன்ச் மாடல் ரூ. 12,999 விலையிலும், 43 இன்ச் மாடல் ரூ. 21,999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.