கூகுள் மேப்ஸ் ஐ.ஒ.எஸ். செயலியில் புதிய மோட்

கூகுள் மேப்ஸ் செயலியின் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் சமீபத்தில் வழங்கப்பட்ட இன்காக்னிட்டோ மோட் தற்சமயம் ஐஒஎஸ் பதிப்பிலும் வழங்கப்படுகிறது. மேப்ஸ் செயலியில் இந்த அம்சம் பயனரின் லொகேஷன் விவரங்கள் கூகுள் அக்கவுண்ட்டில் சேமிக்கப்படுவதை தடுக்கிறது.

ஐ.ஒ.எஸ். தளத்தில் இன்காக்னிட்டோ மோட் ஆண்ட்ராய்டில் இயங்குவதை போன்றே இயங்கும். இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்தும் போது பயனரின் லொகேஷன் விவரங்கள் கூகுள் சர்வரில் சேமிக்கப்படாது. மேலும் மேப்ஸ் செயலியில் வாடிக்கையாளர்கள் தேடிய இடங்கள் பற்றிய விவரங்களும் கூகுள் அக்கவுண்ட்டில் சேமிக்கப்படாது.

இன்காக்னிட்டோ மோட் அம்சத்தைத் தொடர்ந்து ஆண்ட்ராய்டு செயலியில் பல்க் டெலீட் எனும் ஆப்ஷன் அடுத்த மாதம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆண்ட்ராய்டு செயலியில் கூகுள் நிறுவனம் டைம்லைனில் உள்ள தகவல்களை பல்க் டெலீட் செய்யும் வசதியை வழங்க இருக்கிறது. டைம்லைன் அம்சம் வாடிக்கையாளர்கள் தங்களின் லொகேஷன் ஹிஸ்ட்ரியை பார்க்கவே உருவாக்கப்பட்டது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் அடுத்தடுத்த பயணங்களில் விரைந்து முகவரிகளை தேட முடியும்.

விரைவில் வழங்கப்பட இருக்கும் புதிய பல்க் டெலீட் அம்சம் கொண்டு டைம்லைனில் உள்ள அதிகப்படியான விவரங்களை ஒவ்வொன்றாக தேர்வு செய்து அவற்றை வேகமாக அழிக்க செய்ய முடியும். ஐ.ஒ.எஸ். தளத்தில் கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவோர் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பெற ஆப் ஸ்டோர் சென்று செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.