இயர்டிரான்ஸ் ப்ரோ ஏஎன்சி வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்

இயர்டிரான் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹெட்போன் அழகிய தோற்றம் மற்றும் மென்மையான இயர் குஷன் கொண்டிருக்கிறது. இது காதுகளில் அணிந்திருக்கும் போது சவுகரிய அனுபவத்தை வழங்கும்.

ஹெட்போனில் பில்ட்-இன் மைக்ரோபோன் இருப்பதால் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ காலிங் செய்யலாம். இந்த ஹெட்போன்கள் ப்ளூடூத் 4.0 தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இது அதிகபட்சம் 10 மீட்டர் வரையிலான பகுதிகளில் சீராக இயங்கும். இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 22 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.

மைக்ரோ யுஎஸ்பி மூலம் சார்ஜ் செய்யக்கூடிய ஹெட்போனினை சார்ஜ் தீர்ந்து போனால், ஆக்ஸ் (AUX) கேபிள் கொண்டும் பயன்படுத்தலாம். 245 கிராம் எடை கொண்டிருக்கும் இந்த ஹெட்போன் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங் வசதயை கொண்டிருக்கிறது. இந்தியாவில் இயர்டிரான்ஸ் ப்ரோ ஹெட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

இயர்டிரான்ஸ் ப்ரோ ஏஎன்சி வயர்லெஸ் ஹெட்போன் விலை ரூ. 3999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.