ரெட்மி கே30 5ஜி மற்றும் ரெட்மி கே30 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி கே30 5ஜி மற்றும் 4ஜி வெர்ஷன் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் எல்.சி.டி. ஸ்கிரீன் மற்றும் டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது.

ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் மற்றும் பில்ட் இன் 5 வசதி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக ரெட்மி கே30 5ஜி வெளியாகி இருக்கிறது. இத்துடன் ரெட்மி கே30 4ஜி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சோனியின் IMX686 64 எம்.பி. 1/1.7″ சென்சார் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது.

பிரைமரி சென்சாருடன் 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ கேமரா, 2 எம்.பி. போர்டிரெயிட் கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 20 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. போர்டிரெயிட் கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி கே30 4ஜி / 5ஜி சிறப்பம்சங்கள்:

– 6.67- இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன், HDR 10

– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

– கே30 5ஜி – ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், அட்ரினோ 620 GPU

– கே30 4ஜி – ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அட்ரினோ 618 GPU

– 6 ஜி.பி. LPDDR4X ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி

– 8 ஜி.பி. LPDDR4X ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11

– ஹைப்ரிட் டூயல் சிம்

– 64 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 0.8μm, f/1.89

– 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 1.12μm, f/2.2

– 2 எம்.பி. டெப்த் சென்சார்

– 5 எம்.பி. மேக்ரோ சென்சார், 1.75μm, f/2.4

– 20 எம்.பி. செல்ஃபி கேமரா

– 2 எம்.பி. இரண்டாவது கேமரா, 1.75μm

– பக்கவாட்டில் கைரேகை சென்சார்

– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ

– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

– யு.எஸ்.பி. டைப்-சி

– 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ரெட்மி கே30 ஸ்மார்ட்போன் வைட், புளூ ரெட் மற்றும் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை விவரங்களை கீழே காணலாம்..,

ரெட்மி கே30 4ஜி 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 16,100)

ரெட்மி கே30 4ஜி 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 1699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 17,120)

ரெட்மி கே30 4ஜி 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 1899 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 19,120)

ரெட்மி கே30 5ஜி 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 2199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 22,140)

ரெட்மி கே30 5ஜி 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 20,125)

ரெட்மி கே30 5ஜி 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 23,145)

ரெட்மி கே30 5ஜி 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 2599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 26,165)

ரெட்மி கே30 5ஜி 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 2899 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 29,200)