32 எம்பி இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் வி17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் FHD+ சூப்பர் AMOLED ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு பை சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 9 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 120° அல்ட்ராவைடு சென்சார், 2 எம்பி போர்டிரெயிட் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் செல்ஃபி எடுக்க 32 எம்பி இன்-ஸ்கிரீன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட்களை கொண்டிருக்கும் விவோ வி17 ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

விவோ வி17 சிறப்பம்சங்கள்:

– 6.44 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 20:9 E3 சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

– 2 ஜிகஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்

– அட்ரினோ 612 GPU

– 8 ஜிபி LPDDR4x ரேம்

– 128 ஜிபி UFS 2.1 மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 9.2

– டூயல் சிம் ஸ்லாட்

– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.78, 0.8μm பிக்சல், EIS, 6P லென்ஸ், டூயல் LED ஃபிளாஷ்

– 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2

– 2 எம்பி போர்டிரெயிட் கேமரா, f/2.4

– 2 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4

– 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0

– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ

– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– யுஎஸ்பி டைப்-சி

– 4500 எம்ஏஹெச். பேட்டரி

– 18 வாட் டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜிங்

விவோ வி17 ஸ்மார்ட்போன் கிளேசியர் ஐஸ் வைட் மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 22990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முன்பதிவு இன்று துவங்கியுள்ள நிலையில், விற்பனை டிசம்பர் 17 ஆம் தேதி துவங்குகிறது. புதிய விவோ ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு ரூ. 1999 மதிப்புள்ள விவோ XE710 இயர்போன் இலவசமாக வழங்கப்படுகிறது.