மீண்டும் அறிவிக்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ சலுகை கட்டணங்களும் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி ரிலையன்ஸ் ஜியோ சலுகைகள் ரூ. 199 முதல் துவங்குகிறது. இந்த சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 1000 ஆஃப் நெட் நிமிடங்கள் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

தற்சமயம் ரூ. 149 சலுகையை ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் அறிவித்துள்ளது. இந்த சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, 300 ஆஃப் நெட் நிமிடங்கள், 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவன சேவைகளுடன் ஒப்பிடும் போது தினசரி டேட்டா வழங்கும் குறைந்த விலை சலுகையாக இது இருக்கிறது. தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுகையின் விலை ரூ. 219 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்கள் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மேற்கொள்ள முடியும்.

வோடபோன் ரூ. 249 சலுகையில் தினமும் 1.4 ஜி.பி. டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ஏர்டெல் போன்று வோடபோன் சலுகையிலும் அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.