வாட்ஸ்அப் செயலியில் கால் வெயிட்டிங் அம்சம் வழங்கப்படுகிறது

வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் கால் வெயிட்டிங் அம்சம் வழங்கப்படுகிறது. முன்னதாக வாட்ஸ்அப் அழைப்புகளின் போது கால் வெயிட்டிங் நோட்டிஃபிகேஷன் வராமல் இருந்தது.

முன்னதாக கால் வெயிட்டிங் அம்சம் பீட்டா செயலியில் சோதனை செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இது வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு ஸ்டேபிள் பதிப்பில் வழங்கப்படுகிறது.

வாட்ஸ்அப் கால் வெயிட்டிங் அம்சம் கடந்த மாதம் ஐஓஎஸ் இயங்குதள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. புதிய அம்சம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வழங்கப்பட்டிருப்பதால், வாட்ஸ்அப் அழைப்புகளை எவரும் தவரவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஸ்டேபிள் வெர்ஷன் 2.19.352 பதிப்பில் கால் வெயிட்டிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிய அப்டேட் கால் வெயிட்டிங் அம்சம் மட்டுமின்றி மேம்பட்ட பாதுகாப்பு வசதி, கைரேகை அன்லாக் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.