பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 7டி மற்றும் ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில், ஒன்பிளஸ் 8 சீரிஸ் விவரங்கள் இணையத்தில் லீக் ஆக துவங்கியுள்ளன. ஏற்கனவே ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் வெளியான நிலையில், தற்சமயம் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

புதிய ரென்டர்களின் படி ஒன்பிளஸ் 8 லைட் ஸ்மார்ட்போன் மிட்-ரேன்ஜ் பிரிவில் ஃபிளாட் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 7 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன்களை போன்று இவற்றில் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்படாது என கூறப்படுகிறது. இதன் டிஸ்ப்ளே அளவு மற்றும் ரெசல்யூஷன் பற்றிய விவரங்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

OnePlus-8-Lite-render-leaks

ஒன்பிளஸ் 8 லைட் ஸ்மார்ட்போனின் அலெர்ட் ஸ்லைடர், பவர் பட்டன் போன்றவை வலதுபுறத்திலும், வால்யூம் ராக்கர்கள் இடதுபுறத்தல் பொருத்தப்படுகிறது. இவற்றுடன் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் மற்றும் ஸ்பீக்கர் கிரில் ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் வழங்கப்படுகின்றன.

புகைப்படங்களை எடுக்க இரட்டை கேமரா அமைப்பு செவ்வக பம்ப்பில் பொருத்தப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் லேசர் ஆட்டோ ஃபோகஸ், டைம் ஆஃப் ஃபிளைட் சென்சார்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும், கேமரா சென்சார் பற்றிய விவரங்கள் அறியப்படவில்லை.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் போன்று புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் மத்தியில் இன்-ஸ்கிரீன் கேமரா வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

Source: OnLeaks x @91Mobiles