ஜெபிஎல் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

ஜெபிஎல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ C100TWS பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 5.8 எம்.எம். ஆடியோ டிரைவர், ஜெபிஎல் பியூர் பாஸ் சவுண்ட் தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது. இவை தரமான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன.

புதிய ஜெபிஎல் C100TWS இயர்பட்ஸ்-இல் டச் கண்ட்ரோல்கள், சிரி, கூகுள் அசிஸ்டண்ட் வசதி போன்றவை வழங்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் கச்சிதமாக பொருந்தும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய இயர்பட்ஸ்களுடன் மூன்று வித அளவுகளில் இயர்டிப்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த இயர்பட்ஸ் ஐந்து மணி நேர பிளேபேக் கொண்டிருக்கிறது. இதன் கேஸ் கொண்டிருக்கும் பட்சத்தில் கூடுதலாக 12 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும். இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இதனால் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்து ஒரு மணி நேரம் பயன்படுத்த முடியும்.

JBL-C100TWS-Black

ஜெபிஎல் C100TWS சிறப்பம்சங்கள்:

– 5.8 எம்.எம். டிரைவர், ஜெபிஎல் பியூர் பேஸ் சவுண்ட்
– 1kHz/1mW93db டிரைவர் சென்சிடிவிட்டி
– டைனமிக் ஃபிரீக்வன்சி ரெஸ்பான்ஸ் ரேன்ஜ் 20Hz-20kHz
– மைக்ரோபோன் சென்சிடிவிட்டி 40 dBV/Pa
– இம்பென்டன்ஸ் 320ohm
– நீண்ட நேர பயன்பாடுகளிலும் சவுகரிய அனுபவம் வழங்கும் வடிவமைப்பு
– ஒற்றை க்ளிக் மூலம் சிரி மற்றும் கூகுள் நௌ இயக்கும் வசதி
– ப்ளூடூத் 5.0
– 60 எம்ஏஹெச் பேடட்ரி

ஜெபிஎல் C100TWS பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்கி இருக்கிறது.