ஹூவாயின் புதிய ஃபிட்னஸ் பேண்ட் அறிமுகம்

ஹூவாய் நிறுவனத்தின் பேண்ட் 4 ப்ரோ ஃபிட்னஸ் பேண்ட் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த பேண்ட் 3 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

புதிய பேண்ட் 4 ப்ரோ ஃபிட்னஸ் பேண்ட்-இல் 0.95 இன்ச் AMOLED கலர் 2.5டி வளைந்த தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதில் ஹோம் பட்டன், கன்டினுவஸ் ஹார்ட் ரேட் டிராக்கிங், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஜிபிஎஸ் வசதி போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

HUAWEI-Band-4-Pro-Red

ஹூவாய் பேண்ட் 4 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 0.95 இன்ச் 240×120 பிக்சல் AMOLED தொடுதிரை கலர் டிஸ்ப்ளே
– ப்ளூடூத் 4.2 எல்.இ
– பீடோமீட்டர், ஸ்லீப் டிராக்கர், எக்சர்சைஸ் டிராக்கர், செடன்ட்டரி ரிமைண்டர்
– 6-ஆக்சிஸ் சென்சார்கள்
– PPG ஹார்ட் ரேட் சென்சார்
– அழைப்புகள், குறுந்தகவல்கள் நோட்டிஃபிகேஷன்
– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
– ஜிபிஎஸ் மற்றும் என்எஃப்சி
– 11 ஸ்போர்ட் மோட்கள்
– மியூசிக் பிளேபேக் கண்ட்ரோல்
– 100 எம்ஏஹெச் பேட்டரி

ஹூவாய் பேண்ட் 4 ப்ரோ பிளாக், ரெட் மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 399 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 4,040 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.